வலிமை படம் அஜித் ரசிகர்களுக்கான படம் H.வினாத்..!

*வலிமை*

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு எச்.வினோத் நடிகர் அஜீத் குமாரை வைத்து வலிமை என்னும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாகும். தற்போது இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதனால் படத்தின் இயக்குனர் எச்.வினோத் பெரும் உயரத்தில் உள்ளார்.

ஆயினும்கூட அவர் தனது உற்சாகத்தையும் அடக்கத்தையும் தக்க வைத்துக் கொள்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எச்.வினோத் அஜீத்திற்கு கதை சொன்ன ஸ்கிரிப்டில் grey character இடம்பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் வலிமை அந்த ஸ்கிரிப்ட் அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

வலிமை திரைப்படம் முழுக்க முழுக்க அஜித்குமாரின் ரசிகர்களுக்கான படமாகும். படத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பாருங்கள் உங்களுக்கு முழு திருப்தி கிடைக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

சில நாட்களுக்கு முன் மீண்டும் அஜீத் குமாரை வைத்து எச்.வினோத் இயக்கப்போவதாக தகவல் வெளிவந்தது. இதைப்பற்றி எச்.வினோத் “அஜித் சாருடன்(AK61) மீண்டும் ஒரு படத்தில் இணைகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். ப்ரீ புரோடக்க்ஷன் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில் வலிமை படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்“என்று கூறியுள்ளார்.