ஒரு வழியாக பல குழப்பங்களுக்கு பிறகு வலிமை டிரெய்லர்..?

*வலிமை டிரெய்லர்*

எச்.வினோத் இரண்டாவது முறையாக நடிகர் அஜீத் குமாருடன் இணைந்து வலிமை எனும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். வலிமை திரைப்படம் க்ரைம் ஆக்ஷன் கதைக்களத்தில் அமைந்ததாகும்.

வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 2022ஆம் ஆண்டு பொங்கலன்று வெளியாக உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

தற்போது வரை இப்படத்தின் 3 பாடல்கள் மற்றும் Glimpse மட்டும் வெளியாகியுள்ளது ஆனால் இன்னும் படத்தின் டீஸர் அல்லது டிரெய்லர் வெளியாகவில்லை. அஜித்தின் ரசிகர்கள் வலிமை படத்தின் டிரெய்லரை வெளியிடக்கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

வலிமை திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமாகும். கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் தாமதமானது. அஜித் குமாருக்கு இறுதியாக “நேர்கொண்ட பார்வை” திரைப்படம் 2019 இல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வலிமை திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ட்ரைலர் அடுத்த வாரம் வெளியாகும் என்று தகவல் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை.

எச்.வினோத் ஒரு அறிக்கையில் “வலிமை படத்தின் அடுத்த அப்டேட் ட்ரைலராகத்தான் இருக்கும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.