வலிமை vs RRR வெற்றி யாருக்கு?

*வலிமை vs RRR*

2022ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ள இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. தமிழில் முன்னணி நடிகரான அஜித்குமாரின் வலிமை திரைப்படமும், தெலுங்கு பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் இணைந்து நடித்துள்ள RRR திரைப்படமும் ஒரே மாதத்தில் வெவ்வேறு தினங்களில் வெளியாக உள்ளது.

அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படத்திற்கு அஜித்தின் ரசிகர்கள் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருக்கின்றனர். எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ள இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

அதேபோல் தெலுங்கில் இந்திய பிரமாண்ட படமான பாகுபலி இயக்குனர் ராஜமௌலியின் மூன்றாவது பிரம்மாண்ட படைப்பான RRR திரைப்படத்தையும் அனைத்து மோழி ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இதனிடையே ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கிறது அது என்னவென்றால் ஏற்கனவே அஜித் மற்றும் ராஜமௌலியின் திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகியுள்ளது. 2012ஆம் ஆண்டு அஜித்தின் பில்லா 2 திரைப்படம் மற்றும் ராஜமௌலியின் நான் ஈ திரைப்படமும் ஒரே சமயத்தில் வெளியாகியது.

இதில் அஜித் நடித்த பில்லா 2 திரைப்படம் விமர்சன ரீதியாக தோல்வியை சந்தித்ததால் படம் தோல்வி அடைந்தது. ராஜமௌலியின் நான் ஈ திரைப்படம் வெற்றி பெற்றது.

எனவே தற்போது வலிமை மற்றும் RRR திரைப்படங்கள் ஒருவாரத்திற்கு இடைக்காலத்தில் ஒவ்வொன்றும் வெளியாகவுள்ளது. ஜனவரி 7ஆம் தேதி ராஜமௌலியின் RRR திரைப்படமும், ஜனவரி 14-ம் தேதி அஜீத் குமாரின் வலிமை திரைப்படமும் வெளியாக உள்ளது.

இந்த முறை இதில் யாருடைய படம் வெற்றி பெறும் என்பதை அவளுடன் பொருத்திருந்து பார்ப்போம்.