24 காளைகளை அடக்கிய வீர தமிழன்

*வீர தமிழன்*

பொங்கல் விழாவில் அன்று தமிழர்களின் பெருமை மற்றும் பாரம்பரியமான வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். அதுபோல் கடந்த வெள்ளிக்கிழமை பொங்கல் விழாவில் அன்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பல வீரர்கள் மற்றும் காளை மாடுகள் பங்கேற்றனர். கார்த்திக் என்ற மாடுபிடி வீரர் சுமார் 24 காளைகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார்.

கார்த்திக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆவார். பரிசு பெற்ற பிறகு கோரிக்கையாக நான் கல்லூரி முடித்த பிறகு அரசாங்க வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

முதல் பரிசாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வழங்கியுள்ள Datsun கார் மற்றும் கோப்பை கார்த்திற்க்கு வழங்கப்பட்டது. இதற்கு முன் இவர் போன வருடம் மூன்றாவது இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதைப்பற்றி கார்த்திக் கூறுகையில் “சந்தோஷமாக இருக்கிறது, என்னுடைய நண்பர்கள் மற்றும் மாமா ஆகியோர் என்னை ஊக்கப்படுத்தினார் அதுமட்டுமில்லாமல் தெரியாத நபர்கள் கூட நண்பர்களாகப் பழகி உதவி செய்தனர்” என்று குறிப்பிட்டார்.