சம்பளம் வாங்காமல் 2 பாடல்கள் எழுதியுள்ளார் விக்னேஷ்..?

*விக்னேஷ் சிவன்*

அஜித் குமார் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி யூடியூபில் பல சாதனைகளை படைத்தது. இதனால் வலிமை படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் இப்படத்தின் சில தகவல்களை கூறியுள்ளார். வலிமை படத்தில் இரண்டு பாடல்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி கொடுத்துள்ளார் அதற்கு அவர் சம்பளம் வாங்கவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் நடிகர் அஜித்குமார் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து இருந்தாலுமே ஒரு இடத்தில்கூட காவல் அதிகாரி உடையை அவர் அணிந்திருக்க மாட்டார் என்று குறிப்பிட்டார்.

மேலும் அஜித்குமார் காவல்துறையில் அனைவருமே மோசமானவர்கள் என்ற காட்சி இருக்கக் கூடாது மற்றும் தனிப்பட்ட நபரையோ அல்லது அரசியல் சம்பந்தப்பட்ட சர்ச்சைக்குரிய காட்சிகள் இருக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

படத்தில் கதை மற்றும் கதையின் நாயகனின் கதாபாத்திரம் வலிமையாக இருப்பதால் இப்படத்திற்கு வலிமை எனப் பெயரிட்டுள்ளோம் என்றார் எச்.வினோத். இந்நிலையில் வலிமை படத்தின் சில பாடல்கள் நேற்று வெளியாகியது.