காசி தியேட்டருக்கு மாறு வேடத்தில் வந்த விஜய்

*மாறு வேடத்தில் வந்த விஜய்*

பொதுவாக பெரிய முன்னணி நடிகர்கள் தங்களுடைய படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்கு செல்லுவது கடினமான காரியமாக இருக்கும். ஏனென்றால் ரசிகர்களின் கூட்டம் அலை மோதும்.

சமீபத்தில் சென்னையில் உள்ள முன்னணி தியேட்டர்களில் ஒன்றான காசி தியேட்டரின் உரிமையாளரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

உங்க தியேட்டருக்கு ஒரு நடிகர் வந்தது யாருக்குமே தெரியாது என்று யாராவது உள்ளார்களா என காசி தியேட்டர் உரிமையாளரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியது நடிகர் தளபதி விஜய் மூன்று முறை தங்களுடைய தியேட்டருக்கு வந்து படம் பார்த்துள்ளார். அவர் வந்த மூன்று தடவையும் எனக்கும் மற்றும் இந்த ஏரியாவின் இன்ஸ்பெக்டரை தவிர வேறு எவருக்கும் தெரியாது. அவர் போகும்பொழுது தான் ஆடியன்ஸுக்கு தெரியும் அவர் வந்துள்ளார் என்று.

தளபதி விஜய் வந்து பார்த்த மூன்று படங்கள் என்னவென்றால் துப்பாக்கி, கத்தி, மெர்சல். அவர் எப்படி இந்த ரசிகர்கள் மத்தியில் வந்து படம் பார்த்தார் என்று கேட்டப்போது, அவர் ரசிகர்களோடு ரசிகராக மாறுவேஷத்தில் வந்தார் என்று குறிப்பிட்டார்.

Leave a Comment