மகனிடம் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி..!

*விஜய் சேதுபதி*

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. விஜய் சேதுபதியை மக்கள் செல்வன் என்று அழைத்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் சேதுபதி மீது பல குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. சிலர் அதை ஆதரிக்கிறார்கள் மற்றும் சிலர் அதை எதிர்க்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு நேர்காணலில் அவருடைய மகன் பற்றி ஒரு கேலியான விஷயத்தை கூறியுள்ளார்.

விஜய் சேதுபதி வீட்டில் அவருடைய மகன் கம்ப்யூட்டர் கேம் விளையாடிக்கொண்டே இருந்திருக்கிறார் அப்போது விஜய்சேதுபதி அவரிடம் சென்று மன்னிப்புக் கூறியுள்ளார்.

சாரிடா உங்க அப்பன் காசு சம்பாதிச்சனால நீ இப்படி கேம் விளையாண்டு கேட்டு போரடா, எங்க அப்பன் கிட்ட காசு இல்ல அதனால இதெல்லாம் எனக்கு தெரியல. நான் காசு சம்பாதிச்சனால நீ விளையாண்டுக்கிட்டு கடக்க எப்படியாவது இத நிறுத்திவிடுடா” என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.

அதற்கு அவர் மகனுடைய பதில் “Try பண்றேன் பா…. அது உன் Mistake பா நான் என்ன பண்ணட்டும்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது.