கெத்தான புதிய கார் வாங்கிய விஜய் சேதுபதி..?

*புதிய கார்*

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.

விஜய் சேதுபதி தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்து வெளியான சில திரைப்படங்கள் பெரிதாக அவருக்கு வெற்றியை தேடித் தரவில்லை.

அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கி வரும் “விடுதலை” என்னும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு புதிய கார் வாங்கியுள்ளார். அந்தக் கார் உடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.