ஒரு கோடி-ப்பு கண் கலங்கினார் விஜயலட்சுமி..!

*விஜயலட்சுமி*

கடந்த சில மாதங்களாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் ஷோ சமீபத்தில் நிறைவடைந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சி இந்த சர்வைவர் ஷோவை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஷோவிற்க்கு போட்டியாகவே இதை தொடங்கியுள்ளனர் என்று கூறப்பட்டது. ஆரம்பத்தில் சர்வைவர் ஷோ நன்றாக வரவேற்பைப் பெற்றது. ஆனால் போகப் போக அதன் எதிர்பார்ப்பு குறைந்தது என்று சொல்லலாம்.

இந்த ஷோவின் இறுதியில் வெல்பவர்களுக்கு ரூபாய் ஒரு கோடி பரிசு தொகை வழங்கப்படும். இதில் நடிகை விஜயலட்சுமி இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். விஜயலட்சுமிக்கு ஷோவில் பாசிட்டிவ் நெகட்டிவ் கலந்த ஆதரவைப் பெற்றிருந்தார்.

தற்போது விஜயலட்சுமிடம் இதைப் பற்றி கேட்டபோது விஜயலட்சுமி “தன்னைப் பற்றி விமர்சனங்கள் தானாக வரவில்லை மற்ற போட்டியாளர்கள் சிலர் பணம் கொடுத்து ஆட்களை ஏற்பாடு செய்து எனக்கு நெகட்டிவ் கமெண்ட் போட வைத்திருக்கிறார்கள்” என்று புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் சர்வைவர் ஷோவில் வெற்றி பெற்ற பாரிசு தொகை ரூபாய் ஒரு கோடி தன் கைக்கு வந்து சேர சில மாதங்கள் ஆகும் என அவர் கூறியுள்ளார். அவர்களின் ரூல்ஸ் படி சர்வைவர் ஷோ டெலிகாஸ்ட் முடிந்து இரண்டு மாதங்கள் கழித்து தான் பணம் கொடுப்பார்கள் என விஜயலட்சுமி கூறினார்.