தன் மகனுக்காக ரிஸ்க் எடுக்கும் விக்ரம்

*தன் மகனுக்காக ரிஸ்க்*

தமிழ் சினிமாவின் முன்னணி மற்றும் மறக்கமுடியாத நடிகர் சியான் விக்ரம். சினிமாவிற்காக தன் உடலையே வருத்திக்கொண்டு நடிக்கும் ஒரு நாயகன். சீயான் விக்ரமிற்க்கு Haters என்று எவரும் இல்லை என்றே கூறலாம்.

சியான் விக்ரம் தமிழ் சினிமாவில் தன்னுடைய கடுமையான உழைப்பின் மூலம் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தனர். இதனால் இவருக்கு தமிழ்நாடு முழுவதும் ஏறாளமான ரசிகர் பட்டாளம் உள்ளன.

தற்போது சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்நிலையில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து மகான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர், இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார்.

மகான் படத்தில் சியான் விக்ரம் தன்னுடைய மகன்கனுடன் நடித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு இப்படத்திற்காக ஏற்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மகன் துருவ் கேட்டதால் சியான் விக்ரம் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளாராம்.

இதுவரை எந்த படத்திலும் வில்லனாக விக்ரம் நடித்தது இல்லை தற்போது தன் மகனுக்காக முதன்முறையாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மகான் திரைப்படம் கொரோனா பரவலின் காரணமாக திரையரங்களில் வெளியிடாமல் OTT தளத்தில் வெளியிட உள்ளனர்.

மேலும் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் ஏராளமாக இருக்கிறது, பிப்ரவரி மாதத்தில் இப்படம் வெளியாகும் என்று தகவல்கள் கூறுகின்றன.