வலிமை படத்தை நாங்கள் Editing பண்ணவே இல்லை..!

*வலிமை*

வரும் ஜனவரி 13-ஆம் தேதி அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் வெளியாக உள்ளது வலிமை திரைப்படம். இப்படம் ஆக்ஷன் திரில்லர் கலந்த கலவையாகும் குறிப்பாக இப்படத்தில் Bike Stunts அதிகமாக உள்ளது.

வலிமை திரைப்படத்தில் Stuntsக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து கதையில் ஒரு அங்கமாக அமைத்துள்ளனர். அஜித்குமார் ஒரு ரேசர் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் பைக் ஓட்டினால் ரசிகர்கள் உற்ச்சாகத்துடன் பார்ப்பார்கள். இப்படத்தில் பல இடத்தில் தன் பைக் ரேஸ் வித்தைகளை காட்டியுள்ளார் அஜித் குமார்.

சமீபத்தில் வலிமை திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த ட்ரைலரில் அதிகமான பைக் ரேஸ் காட்சிகள் இருப்பதால் அஜித் குமாரின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.

தற்போது வலிமை திரைப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஒரு நேர்காணலில், “Lockdownக்கு முன்பே நாங்கள் படத்தின் 70% படப்பிடிப்பை முடித்துவிட்டோம். மீதி படப்பிடிப்பு ஒரு Stunt Sequence ஸ்பெயின் நாட்டில் எடுப்பதாக இருந்தோம் ஆனால் அங்கு Lockdown என்பதால் படப்பிடிப்பு தள்ளிப்போனது“.

“பிறகு அந்த படப்பிடிப்பை ஸ்பெயினில் உள்ள Stunt Teamஐ வைத்து எடுத்தனர். நாங்கள் அங்கு செல்லவில்லை ஏனென்றால் கொரோனா காலத்தால் கட்டுப்பாடுகள் இருந்தன” என்று கூறியுள்ளார். “மேலும் அஜித்குமார் பைக் ரைட் செய்த காட்சிகள் எதையும் கட் அல்லவோ எடிட்டிங் செய்யவில்லை. அஜித்குமார் 150 கிலோமீட்டர் வேகத்தில் பைக்கை ஓட்டினார் அந்த காட்சிகளை எதுவும் எடிட் செய்யாமல் அப்படியே படத்தில் வைத்திருக்கிறோம்” என்று குறிப்பிட்டார்.