Divorce பண்ணோம் ஆனா இப்போ இல்ல

*தனுஷ் ஐஸ்வர்யா*

கணவன் மனைவியான தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பிரியப்போவதாக தகவல் வந்த பிறகு, அவர்கள் இருவரை சேர்த்து வைப்பதற்காக கஸ்தூரி ராஜா, ரஜினிகாந்த் போன்ற இரு குடும்பத் தரப்பினர்களும் முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவருக்கிடையில் விவாகரத்து கிடையாது, இது கணவன் மனைவி இருவருக்கு இருக்கும் குடும்ப சண்டை தான் என்று தனுஷ் உடைய அப்பா கஸ்தூரி ராஜா ஏற்கனவே கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ஹைதராபாத்தில் ஒரே ஹோட்டலில் தங்கியிருப்பதாக முதலில் தகவல் வெளிவந்தது.

கடந்த ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிந்து வாழப் போவதாக அறிக்கை வெளியிட்டனர் இதையடித்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பற்றி பல வதந்திகள் பரவ ஆரம்பித்தது ஆனால் அவர்களுடைய பிரிவு தற்காலிகமானதுதான் கஸ்தூரிராஜா உறுதியளித்திருந்தார்.

தற்போது தனுஷ் வாத்தி படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் தங்கியிருக்கிறார் அதேபோல் ஐஸ்வர்யாவும் ஒரு Album Song படப்பிடிப்பிற்காக அங்கு இருக்கிறார். ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஸ்டுடியோவில் சித்தாரா என்னும் ஹோட்டலில்தான் இருவரும் தங்கியுள்ளனர்.

தற்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் இருவரும் மீண்டும் சேர்ந்து விடுவார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. இருவருக்கும் படப்பிடிப்பு முடிந்த பிறகு சென்னையில் இது குறித்து முடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.