ஒரே படத்தில் சூர்யா கார்த்தி என்ன படம்

*சூர்யா கார்த்தி*

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இதற்கு முன்னரே நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் என்ற திரைப்படத்தை இயக்கினார் அப்படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது .

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா ஒரு சிறிய காட்சியில் வருவார். அப்போது இயக்குனர் பாண்டிராஜிடம் சூர்யா மற்றும் கார்த்தி இருவரையும் ஒரே படத்தில் வைத்து நீங்கள் படம் எடுப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பாண்டிராஜ் “சூர்யா மற்றும் கார்த்திக இருவரும் ஒரே படத்தில் நடிப்பதற்கான ஒன் லைன் கதை என்னிடம் உள்ளது ஆனால் இன்னும் முழுமையாக கதை உருவாக்கவில்லை” என்று கூறினார்.

தற்போது முத்தையா இயக்கத்தில் கார்த்தி விருமன் என்ற படத்தில் நடித்துள்ளார். விருமன் மற்றும் எதற்கும் துணிந்தவன் திரைப்படங்களின் First look புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இதில் சூர்யா, கார்த்தி இருவரும் சிவப்பு நிறத்தில் உள்ள சட்டையை அணிந்திருந்தனர். அவர்கள் இருவரையும் ஒரே புகைப்படத்தில் எடிட் செய்து அதை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் நீங்கள் முன்னே சொன்ன சூர்யா, கார்த்திகான ஒன் லைன் கதை என்ன ஆனது என்று கேட்டுள்ளனர்கள். அதற்கு பாண்டிராஜ் “அந்தக் கதையை நான் முழுவதுமாக முடித்து விட்டேன் இதற்கான படப்பிடிப்பு எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம், இருவரும் ஒரே நேரத்தில் கால்ஷீட் கொடுத்தால் நான் இப்படத்தை இயக்குவேன்” என்று பதிலளித்துள்ளார்.

இந்த செய்தியை கேட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சூர்யா, கார்த்தி இருவரையும் வைத்து பாண்டிராஜ் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் திரைப்படத்தை இயக்கி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.