விஜய் டிவி ராமர் ம‌ற்று‌ம் TikTok சாதனா என்னாச்சு..?

*ராமர் ம‌ற்று‌ம் TikTok சாதனா*

தற்போது சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராம் Reels மற்றும் Prankகின் மூலமாக பிரபலமடைந்தவர் திருச்சி சாதனா. இவருடைய வீடியோக்கள் மற்றும் அலப்பறைகளாலும் சமூக வலைதளங்களில் தானகான Followersஐ தக்க வைத்துள்ளார்.

திருச்சி சாதனாவின் தற்போதைய வீடியோ வைரலாக பரவி வருகிறது. பல்லாவரம் சந்தையில் திருச்சி சாதனா விஜய் டிவி புகழ் ராமருடன் ஷாப்பிங் செய்துள்ளார். திருச்சி சாதனா விற்கும் விஜய் டிவி புகழ் ராமருக்கும் என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.

டி ஷர்ட் பேண்ட் அணிந்து ராமர், பச்சை கலர் புடவையில் திருச்சி சாதனா இருவரும் ஜோடியாக முதலில் ஒரு ஃபேன்சி பொருட்கள் கடைக்கு சென்றனர். சாதனா ஒரு தோடை வாங்கி அதை ராமர் முன்னிலையிலேயே அணிகிறார்.

பின்பு இருவரும் டாட்டூ அணியும் கடைக்கு சென்றனர். அதைப் பார்த்த திருச்சி சாதனா நானும் “டாட்டூ குத்திக்கவாஎன்று ராமரிடம் கேட்கிறார் ராமர் “ம்..குத்திக்க” என்கிறார். “நெஞ்சில் குத்திக்கவா..சரி குத்திக்க… யார் பெயர் குத்த… உன் புருஷன் பெயர் குத்திக்கோ” என்றார் ராமர். “அவர் பேரை தான் கையில குத்தி இருக்கேன்“…என சாதனா கூற “சரி உன் பிள்ளைகள் பெயரைக் குத்திக்கோ” என்றார் ராமர்.

இப்படியே இருவரும் பேசிக்கொண்டு பல்லாவரம் சந்தையில் ஷாப்பிங் செய்து வந்தனர். இறுதியில் சாதனா ஒரு கேரவேனில் ஏறிக்கொள்கிறார். அதை ராமர் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார். அந்தப் பகுதியின் சூழலை பார்க்கும்போது அது ஒரு சூட்டிங் ஸ்பார்ட்டாக தெரிகிறது.

இது என்ன மாதிரி விஷயம் என்று தெரியவில்லை ஆனால் இதில் ராமர் மாட்டிக்கொண்டார் என்று சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வருகிறது.