தமிழ்நாடு ஊரடங்கு முக்கிய மூன்று அறிவிப்புகள் என்னென்ன?

*முக்கிய மூன்று அறிவிப்புகள்*

கட்டுப்படுத்த முடியாத கொரோனா தொற்று மீண்டும் தமிழகத்தில் பரவி வருவதால் கட்டுப்பாடுகளை மீண்டும் தமிழக அரசு விதித்துள்ளனர்.

இப்போது தமிழ்நாட்டில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மீண்டும் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்துள்ளது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதன் காரணமாக மீண்டும் பாதிப்பு ஏற்ப்பட மேலும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகப் படுத்தப்பட்டுள்ளது.

  • என்னென்ன கட்டுப்பாடுகள் என்று பார்த்தால் ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜனவரி 16ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
  • பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்ல நினைக்கும் மக்கள் நலன் கருதி தற்போது 75 சதவீதம் மட்டும் பேருந்துகளில் இருக்கை அமைத்துள்ளனர்.

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் நிறைய நபர்கள் உள்ளன. அவர்கள் எல்லோரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அன்போடு கேட்டுக் கொண்டனர்.

பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும். எல்லாக் கடைகளிலும் கண்டிப்பாக Sanitaizer பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.