இயக்குனர் பாலா இப்படி பட்டவரா என்ன சொல்ரிங்க?

*இயக்குனர் பாலா*

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர் பாலா. இவருடைய படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தன்னுடைய இயக்கத்தில் எப்போதும் எதார்த்தம் நிச்சயமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் நபர் பாலா.

தற்போது நான் கடவுள் திரைப்படத்தில் நடித்த ஒரு திருநங்கையிடம் பாலாவை பற்றி நேர்காணலில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதில் தொகுப்பாளர் “இயக்குனர் பாலாவுடன் வேலை செய்த அனுபவம் பற்றிக் கூறுங்கள்” என்று திருநங்கையிடம் கேட்டார்.

“இயக்குனர் பாலாவுடன் நான் கிட்டத்தட்ட 5 வருடங்கள் சினிமாவில் பணிபுரிந்து இருக்கிறேன், பிறர் கூறுமாறு அவர் கோவக்காரர் அல்ல மிகவும் அன்பு உள்ளம் கொண்டவர். தமிழ் திரையுலகில் டைரக்டர்கள் கதாநாயகன் அல்லது கதாநாயகியிடம் மட்டும் உட்கார்ந்து பேசுவார்கள் ஆனால் பாலா சார் அப்படி இல்லை அவர் எல்லோரும் கூடையும் சகமாக பேசுவார், தினமும் ஒரு மணி நேரமாவது எங்களை கூப்பிட்டு உட்கார வைத்துப் பேசுவார், மிகவும் அன்பான நபர்” என்று அந்த திருநங்கை கூறினார்.