என்ன ஏமாத்திட்டாறு BB அமீர் மகள் வருத்தம்..?

*BB அமீர்*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 வீட்டில் போட்டியாளராக விளையாடிக்கோண்டிறுப்பவர் தான் அமீர். அமீர் ஒரு நடன பயிற்சியாளர் என்பது எல்லோருக்கும் தெரியும். சமீபத்தில் பிக்பாஸ் வீட்டில் தனது வாழ்க்கையைப் பற்றி கூறினார். அது அனைவரையும் உருக்கச்செய்தது.

சைஜி உடைய குடும்பம் தான் அமீரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிக்பாஸ் வீட்டிற்கு கூட அமீரின் குடும்பமாக தான் சைஜி குடும்பம் வந்தனர். சைஜி மற்றும் அவரது தங்கை அலினா இருவரும் டான்சர்கள் என்பது பிக்பாஸ் வீட்டில் அவர்கள் நடனம் ஆடிய போது தெரிந்தது.

இந்நிலையில் சைஜி மற்றும் அலினா இருவரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடைபெறும் நடன போட்டியில் பங்கேற்று வந்தனர். இருவரும் அரையிறுதி வரை முன்னேறினர் தற்போது அரையிறுதியில் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதனால் அலினா மிகவும் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தார். பிறகு சைஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “அலினா அலாத நீ இப்படி அலுது என்னைய அமீர் கிட்ட மாட்டி விற்றாத, அமீர் வந்து என்ன சொல்ல போறான்னு நான் பீதியில் இருக்கேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது பிக்பாஸ் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.