என்னது அந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறாங்களா..!

*ஐஸ்வர்யா ராஜேஷ்*

மலையாளத்தில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ஆர்யா சனிக்கிழமை வெளியிட்டார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த அசல் படத்தின் நடிகை நிமிஷா சஜயன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவும், லியோ ஜான் பால் படத்தொகுப்பும் செய்ய உள்ளனர். சமையலறையில் அடைக்கப்பட்ட பெண்களின் அவல நிலையயை எடுத்துரைக்கும் மலையாளப் படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான வசனங்களை சவாரி மற்றும் ஜீவிதா சுரேஷ்குமார் எழுதியுள்ளார்.

ஜெர்ரி சில்வர்ஸ்டர் வின்சென்ட் இசையமைக்கும் இப்படத்தின் தமிழ் ரீமேக்கை துர்கரம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி ஆகியோர் தயாரித்துள்ளனர்.