ரஜினிகாந்த் மகள்களுக்கு என்ன குறை

*ரஜினிகாந்த் மகள்*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக நேற்று அறிவித்தனர். இந்த செய்தி தற்போது திறையுலகில் மட்டுமில்லாமல் தனுஷ் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சித் தகவலாக பரவி வருகிறது.

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத விதமாக இருவரும் பிரியப் போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருக்கின்றனர்.

சில வருடத்திற்கு முன் இதேபோல் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகளிற்கு விவாகரத்து நடந்தது அதன் பிறகு விமர்சையா இரண்டாவது முறை திருமணம் செய்து வைத்தனர்.

சில மாதங்களுக்கு முன் பிரபல நடிகை சமந்தா மற்றும் பிரபல நடிகர் நாக சைதன்யா இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் திரையுலக ரசிகர்கள் வெளிவரவில்லை அதற்குள் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் பிரிவு அதிர்ச்சியான செய்தியாக இருக்கிறது.

சினிமாவில் இருப்பவர்கள் மேல் கிசுகிசுக்கள் வருவது பொதுவான விஷயமாகும். ஆனால் அடிக்கடி தொடர்ந்து கிசுகிசு ஒரு நடிகர் மேல் வருகிறது என்றால் அது தனுஷ் மட்டும்தான். பலமுறை தனுஷ் மற்றும் பல நடிகைகளை வைத்து கிசுகிசுகள் வந்திருக்கிறது.

இப்படி பல நடிகைகளோடு தொடர்புபடுத்தி கிசுகிசுக்கள் பரப்பப்பட்டதானால் நடிகர் தனுஷின் திருமண வாழ்க்கையில் புயலைக் கிளப்பி இருவருக்கும் அது விவாகரத்து வரை போகி உள்ளதா என்பது பற்றி தெரியவில்லை ஆனால் இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்திற்கு இது மிகுந்த மன வேதனையை அளிக்கும் என்பது மறுக்கமுடியாத ஒன்று ஏனென்றால் ஏற்கனவே இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து அதன் பிறகு திருமணம் தற்போது மூத்த மகள் ஐஸ்வர்யா 18 வருடங்கள் கழித்து விவாகரத்து என்று வந்து இருக்கையில் இதை எப்படி ரஜினிகாந்த் எடுத்துப்பார் அது எந்த அளவுக்கு வருத்தத்தை கொடுக்கும் என்பது பற்றி தெரியவில்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.