வெள்ளம் வந்தால் தப்பிப்பதற்கு சிறந்த வழி என்ன..?

*தப்பிப்பதற்கு சிறந்த வழி என்ன*

தற்போது சென்னையில் பெய்த மழையால் ஊரிர்க்குள் வெள்ளம் பெருகி ஓடுகிறது. வெள்ளத்தால் பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல் 2015யிலும் சென்னையில் வெள்ளம் பெருகி ஓடியது அதனால் பலரும் தனது வாழ்வாதாரத்தை இழந்தனர். 2015யை விட தற்போது குறைவான சேதம் தான் ஏற்பட்டுள்ளது.

இப்போது வெள்ளம் வந்தால் எப்படி தப்பிக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

முதலில் உங்களுக்குத் தேவையான பொருட்கள், முக்கியமான பொருட்கள் மற்றும் அன்றாட வாழ்விற்கு தேவைப்படும் பொருட்களை எடுத்துக்கொண்டு உயரமான இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

எதர்ச்சியாக நீங்கள் முக்கியமான பொருட்களை வெள்ளம் நிரம்பி இடத்தில் விட்டிரிந்தாலோ மறுபடியும் அந்த தண்ணீருக்குள் செல்வது நல்லது அல்ல.

பொதுவாக மழை வெள்ளத்தில் தண்ணீருக்குள் என்ன இருக்கும் என்பது நமக்கு தெரியாது. சில பாம்பு தேள் எலி போன்றவைகள் அந்த தண்ணிக்குள் இருக்க வாய்ப்பு உண்டு அதுமட்டுமில்லாமல் தண்ணீர் எவ்வளவு ஆழம் என்றும் நமக்குத் தெரியாது.

முக்கியமான ஒரு விஷயம் வெள்ளம் வந்த பிறகு பைப் தண்ணியோ அல்லது வெள்ளம் நீரையோ தாகம் எடுக்குது என்பதற்காக குடித்து விடாதீர்கள். ஏனென்றால் அந்த வெள்ளத்தில் வரும் தண்ணீரில் சாக்கடை கலந்திருக்கும். சாக்கடையில் அசுத்தம் வாய்ந்த பொருட்கள் பாக்டீரியாக்களும் நிறைந்து இருக்கும். இது எல்லாம் வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரு முன்னெச்சரிக்கை.

நீங்கள் ஏற்கனவே வெள்ளத்தில் மாட்டிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா?

நீங்கள் வெள்ளத்தில் மாட்டின பிறகு உங்களால் முடிந்தவரை உங்கள் இரு கால்களை மேலே தூக்கி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பக்கத்தில் ஏதேனும் உங்களை தாங்குவது போல் எதும் பொருள் இருந்தால் அதை இறுக்கமாக பிடித்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் நீங்கள் அதை நன்றாக பிடித்துக் கொண்டாள் வெள்ளத்தில் அடித்துச் செல்லாமல் இருப்பீர்கள். உங்களுக்கு உதவி கிடைக்கும் வரை அதை பிடித்துக் கொள்வது உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடிய வழியாகும்.