தளபதியுடன் ஜோடி சேரும் Rashmika என்ன படம்..?

*Rashmika*

தளபதி விஜய் நடித்து கோடை நாட்களில் வெளியாக உள்ள திரைப்படம் “பீஸ்ட்” தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிசியாக உள்ளது. சமீபத்தில் தளபதி விஜயின் 66வது திரைப்படத்தை தெலுங்கு டைரக்டரான வம்சி படிப்பள்ளி இயக்கப் போவதாக தகவல் வெளியாகியது.

இதனையடுத்து தற்போது தளபதி 66 வது படத்தின் படப்பிடிப்பிற்கு விரைவில் விஜய் செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கப்போவதாக கூறப்பட்டது ஆனால் தற்போது அவருக்கு பதில் வேறு ஒரு நடிகை நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

பீஸ்ட் படப்பிடிப்பை முடித்துக் கொண்ட தளபதி விஜய் தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டுப் பயணம் செல்வதாக கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணம் முடிந்தபின் அவர் அடுத்ததாக தளபதி 66 ஆவது படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.

வம்சி படிப்பள்ளி இயக்கவிருக்கும் தளபதியின் 66 வது படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகவுள்ளது. விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள அனைவருடைய பெயரும் வெளியிடப்படும். கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷிற்கு பதில் ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

ராஷ்மிகா மந்தனா நீண்ட நாட்களுக்கு முன் இருந்தே தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்று பல மேடைகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.