யார் இந்த அன்னபூரணி உண்மை முகம் என்ன..!

*அன்னபூரணி*

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவரும் விஷயம் செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் ஒட்டப்பட்டி இருக்கக்கூடிய போஸ்டர்கள் குறித்துதான்.

அந்த போஸ்டரில் ஆன்மீக ரீதியாக விஷயங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் புதிய அவதாரமாக ஒருவர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் தற்போது விவாதமாக மாறியுள்ளது.

அகிலத்தை ஆளும் ஆதிபராசக்தியின் அவதாரமே அன்னபூரணி அரசு அம்மா” என அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அன்னபூரணி யாரென்று விசாரித்தப் போது சில வருடங்களுக்கு முன்பு “சொல்வதெல்லாம் உண்மை” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்று பலர் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அன்னபூரணி அரசு அம்மாவின் யூடியூப் பக்கத்திலும் பல்வேறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன அதில் பக்தர்கள் பரவச நிலையில் தரிசனம் மேற்கொள்ளும் காட்சிகள் அடங்கியுள்ளன.

வரும் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டன்று சனிக்கிழமை அம்மாவின் திவ்யதரிசனம் நடைபெறவுள்ளதாகவும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது.

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் பங்கேற்றவர் தற்போது சாமி அவதாரம் எடுத்து விட்டார் அவரிடம் மக்கள் தரிசனம் வாங்குகின்றனர் இன்று சமூக வலைதளங்களில் விமர்சித்தும் விவாதித்தும் வருகின்றனர்.

இதைப்பற்றி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசுவது சரியாக இருக்காது அதேசமயம் இப்படியான சாமியார்களை நம்பி ஏமாறும் மக்களை முட்டாள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த மாதிரி சாமி என்று சொல்பவர்களின் கால்களில் மக்கள் விழுவது மிகவும் தப்பான விஷயம் முட்டாள்தனமும் கூட என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே சாமி என்று சொல்லி திரிபவர்கள் மேல் எத்தனை குற்றம் உண்மையாக்கப்பட்டுள்ளது இதில் பாலியல் குற்றங்களும் அடங்கும். இருப்பினும் பலர் நாங்கள் தான் கடவுளின் அவதாரம் என்று கிளம்புகின்றன இப்படித்தான் இந்த அன்னபூரணியும் கிளம்பியுள்ளார்.

இப்படிப்பட்டவர்களுக்கும் மக்களிடம் இருந்து பெருகும் ஆதரவும் நம்முடைய சமூகம் எந்த அளவு பின்தங்கி இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது. இதுபோன்ற ஏமாற்றுகாரர்களை நம்பாமல் பகுத்தறிவோடு செயல்படவேண்டும்.

விரைவில் இந்த அன்னபூரணி போலீசிடம் சிக்கி விடுவார் என்று சமூக வலைதளங்களில் கூறியவருகின்றனர்.