நடிகர் ரஜினியிடம் பேச மறுக்கும் நடிகர் விஜய் என்ன காரணம்?

*ரஜினியிடம் பேச மறுக்கும் விஜய்*

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் தான் பீஸ்ட். இப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் கூறுகின்றனர். இதனால் நடிகர் தளபதி விஜய் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் இருவரும் மனஸ்தாபம் காரணமாக பேசாமல் இருக்கிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

அப்பாவிற்கும் மகனிற்க்கும் ஆயிரம் இருக்கும் இது ஒரு பெரிய விஷயம் இல்லை இதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று எஸ் ஏ சந்திரசேகர் கூறியுள்ளார்.

இதற்கிடையே இன்னும் இவர்கள் இருவருக்கிடையே பிரச்சனை முடியாத நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் நடிகர் ரஜினிகாந்திடம் இதைப்பற்றி கூறி விஜயிடம் சமரசம் பேசப் போவதாக தகவல்கள் வெளியானது.

தற்போது நடிகர் விஜய் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் ரஜினிகாந்தால் அவரிடம் பேச முடியவில்லை. ஆனால் விஜய் இதைப்பற்றி கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை என்றும் விரைவில் விஜயிடம் ரஜினிகாந்த் பேசி ஒரு முடிவு எடுப்பார் என சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.