மறுபடியும் ரிலீஸ் தேதி மாற்றம் காரணம் என்ன..!

*ரிலீஸ் தேதி மாற்றம்*

நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம் பொங்களை முன்னிட்டு வரும் ஜனவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் அஜித் குமாரின் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றனர்.

மேலும் வலிமை படத்தில் இருந்து வந்த ஒவ்வொரு அப்டேட்களும் பிரமாதமாகவும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையிலும் இருந்தது. அதுமட்டுமில்லாமல் படத்தின் வியாபாரங்களும் நல்லபடியாக முடிந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த தகவலின் படி வலிமை திரைப்படம் அமெரிக்காவில் ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் அஜித் ரசிகர்கள் நமக்கு ஒரு நாள் முன்பாகவே படத்தை பார்த்து விடுவார்கள் என்று தெரிகிறது.

எது எப்படியோ இரண்டு வருடத்திற்கு பிறகு நடிகர் அஜீத் குமாரை வலிமை திரைப்படத்தில் பார்க்கப்போகிறோம் என்ற உற்சாகத்தில் ரசிகர்கள் உள்ளனர்.