2022 இல் Top10 தமிழ் நடிகர்களின் சம்பளம் என்ன..?

*Top10 தமிழ் நடிகர்களின் சம்பளம்*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் சம்பளங்களை தெரிந்துகொள்ள ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது தமிழ் சினிமா முன்னணி நடிகர்களின் சம்பளத்தை பட்டியலில் பார்ப்போம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் Legend என்றே இவரைக் கூறலாம். இன்றைய காலகட்டத்திலும் ரஜினிகாந்திற்கு மார்க்கெட் பெருமளவில் உள்ளது. ரஜினிகாந்த் சமீபகாலமாக 110 கோடி சம்பளமாக வாங்கி வந்தார். தற்போது இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் ரஜினிகாந்தின் சம்பளம் குறையும் என கூறப்படுகிறது.

தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் பெரும் மார்க்கெட் தளபதி விஜய்க்கு உள்ளது. தமிழ் நடிகர்களில் இவருக்கு தான் அதிக ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். தளபதி விஜய் “பீஸ்ட்” படத்திற்கு ரூபாய் 100 கோடி சம்பளம் என்று தகவல் வெளிவந்துள்ளது.

அஜித் குமார்

தளபதி விஜய் எப்படியோ அப்படியே அஜித்குமாருக்கு ரசிகர் பட்டாளமும் மார்க்கெட்டும் உள்ளது. தமிழ் திரைத்துறையில் இருவருக்கும் கடும் போட்டி என்றே கூறலாம். அஜித் குமார் தற்போது ரூபாய் 55 – 65 கோடி வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. தயாரிப்பாளர் போனி கபூர் உடன் மூன்று படத்திற்கு 180 கோடி சம்பளம் Agreement செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன்

உலகநாயகன் கமலஹாசன் தமிழ் சினிமாவின் மதிப்புள்ள பொக்கிஷம் என்றே கூறலாம். கமல்ஹாசன் ஒரு படத்திற்கு ரூபாய் 50 – 55 கோடி வாங்குகிறார்.

சூர்யா சிவகுமார்

தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகன் சூர்யா. இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 40 – 45 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் கூறுகிறது.

தனுஷ்

Kollywoodல் இருந்து Hollywood வரைச்சென்று நடித்துள்ள நாயகன் தனுஷ். தனுஷ் ஒரு படத்திற்கு ரூபாய் 20 – 25 கோடி சம்பளம் வாங்குகிறார்.

விக்ரம்

தன்னுடைய உடம்பை வருத்தி நடிப்பதில் இவருக்கு நிகர் இவரே. விக்ரம் ஒரு படத்திற்கு ரூபாய் 20 கோடி சம்பளம் வாங்குகிறார்.

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நாயகனாக திகழ்ந்தவர் சிவகார்த்திகேயன். இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 20 – 25 கோடி சம்பளம் வாங்குகிறார்.

விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படுபவர் விஜயசேதுபதி. இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 12 – 15 கோடி சம்பளம் வாங்குகிறார்.

சிம்பு

ஐந்து வருடங்கள் படம் வரவில்லை என்றாலும் தற்போது தன்னுடைய படம் ரிலீஸ் ஆனாலும் தன்னுடைய மார்க்கெட்டை குறையாமல் வைத்திருக்கும் நடிகர் சிம்பு. ஏனென்றால் இதற்குக் காரணம் அவர் சம்பாதித்துள்ள அன்பான ரசிகர்கள். இவர் தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்திற்கு வாங்கிய சம்பளம் ரூபாய் 15 கோடி என்று கூறப்படுகிறது.