வலிமை திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் எவ்வளவு?

*வலிமை பட்ஜெட்*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தினை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார், Bayview Project LLP இன் கீழ், Zee Studios உடன் இணைந்து, இணை தயாரிப்பாளராகவும் விநியோகஸ்தராகவும் போனி கபூர் தயாரித்துள்ளார்.

ஹுமா குரேஷி, கார்த்திகேயா, பானி ஜே, சுமித்ரா, ராய் அய்யப்பா, சைத்ரா ரேட்டி, புகழ், யோகி பாபு, துருவன், தினேஷ் பிரபாகர், செல்வா, ஜி.எம் சுந்தர், அச்யுத் குமார், பவீல் நவகீதன், கார்த்தி ராஜா ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

வலிமை படத்தின் ஒட்டு மொத்த பட்ஜெட்டின் தகவல் எங்கும் கிடைக்கவில்லை. வலிமை படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் தள்ளிப் போடப்பட்டு மீண்டும் நடத்தப்பட்டதால் ஏற்கனவே இப்படத்திற்கான ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டைவிட கூடுதலாகவே செலவாகியுள்ளது என்று கூறப்படுகிறது.

வலிமை திரைப்படத்தின் பூஜை 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது, அப்போது அதிகாரப்பூர்வமாக படத்தினுடைய பட்ஜெட் கிட்டத்தட்ட 90 கோடி என்று கூறப்பட்டது ஆனால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கொரோனாவின் பரவல் உலகம் முழுவதும் பரவி உலக நாடுகளையே அச்ச படுத்தியது. இதனால் படத்தின் படப்பிடிப்பு சிறிது காலம் தள்ளிப் போடப்பட்டது, படப்பிடிப்பு தள்ளிப்போடப்பட்டதால் படத்திற்கான செலவு கூடியது. பிறகு மீண்டும் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட்டு படப்பிடிப்பு தள்ளிப் போடப்பட்டது. அதன் பிறகு ஒரு வழியாக மொத்த படப்பிடிப்பையும் படக்குழு 2020ஆம் ஆண்டு முடித்தனர். தற்போது மணிமே படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் சுமார் 175 கோடி என்று கூறப்படுகிறது.

இப்படத்தின் பட்ஜெட் இவ்வளவு கூடுதலாக இருக்க காரணம் கொரோனா மட்டும் கிடையாது, இப்படத்தில் சில VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளன அதற்காகவும் படத்தினுடைய பட்ஜெட் கூடுதலாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் கடந்த இரண்டு வருடங்களில் தமிழ் சினிமாவில் அதிகமாக வியாபாரம் அகப்பட்ட திரைப்படம் வலிமை என்று குறிப்பிடுகின்றனர், இப்படம் கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. பாலிவுட் திரை அரங்குகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் இப்படம் வெளியாக போகிறது, குறிப்பாக முதன் முறையாக சவூதி அரேபியாவில் ரசிகர்கள் காட்சிக்காக அனுமதிக்கப்பட்ட முதல் திரைப்படம் இது என்ற பெருமையை பெற்றுள்ளது.

உலகமெங்கும் நாளை (பிப்ரவரி 24) வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது, இதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் கொண்டாட்டத்திற்காக காத்திருக்கின்றனர்