என்ன தல புஷ்பா படத்தின் மொத்த வசூல்..!

*புஷ்பா வசூல்*

2021ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாகியது புஷ்பா திரைப்படம். புஷ்பா திரைப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடித்திருந்தார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக மற்றும் பல முன்னணி நடிகர்கள் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை சுகுமார் இயக்கியுள்ளார்.

புஷ்பா திரைப்படத்திற்கு மூவி மேக்கர்ஸ் பெரும் பொருட் செலவு செய்துள்ளது. வசூல் ரீதியாக இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. புஷ்பா திரைப்படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூபாய் 250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

புஷ்பா திரைப்படம் வெளியாகி முதல் மூன்று நாட்களில் ரூபாய் 173 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இதனை அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தது. மேலும் புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி முதல் வாரத்தில் மட்டும் ரூபாய் 229 கோடி வசூலித்தது.

இந்நிலையில் தற்போது புஷ்பா திரைப்படம் ரூபாய் 300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய படங்களில் புஷ்பா திரைப்படம் அதிக வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பிலிருந்து கூறப்படுகிறது.