RRR படத்தின் மொத்த செலவு என்ன..?

*RRR*

தெலுங்கு சினிமா பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ளது RRR. இப்படத்தில் தெலுங்கு பெரிய நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர் மற்றும் ஆலியா பட் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பாகுபலி என்ற பிரம்மாண்ட படைப்பை படைத்த பிறகு ராஜமவுலி தற்போது RRR என்னும் பிரம்மாண்ட படைப்பை படைத்துள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

வரும் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளது. இதுவரை இப்படத்தின் பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு பிரம்மாண்டமாக ட்ரெய்லர் இருக்கிறது இப்படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டுமென்று இந்தியாவில் உள்ள அனைத்து மொழி சினிமா ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

RRR திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி என்று தகவல் கிடைத்துள்ளது. இதற்கு முன்னர் ராஜமவுலி எடுத்த பாகுபலி இரண்டு பாகங்களும் சேர்த்தே பட்ஜெட் 430 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

RRR திரைப்படம் இந்திய சினிமாவில் ஒரு பெரும் மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment