வலிமை படத்தின் மொத்த செலவு என்ன..?

*வலிமை*

தமிழ் சினிமா முன்னணி நடிகரான அஜித் குமார் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார். அஜித் குமார், ஹேமா குறைஷி, கார்த்திகேயா மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை 2019ல் வெளியாகியது அதற்குப் பிறகு அஜித்குமாருக்கு தற்போதுதான் படம் வெளியாக உள்ளது. கொரோனாவால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போனது. அஜித்தின் ரசிகர்கள் இப்படத்தை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக காத்திருந்த கொண்டிருக்கின்றன.

வலிமை படத்தின் அப்டேட் கூட ஒரு வருடமாக விடவில்லை. இதனால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு கேட்டு படக்குழுவினர்களை தொல்லை செய்து வந்தனர்.

இறுதியாக இப்படம் 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி அன்று திரையரங்குகளிள் வெளியாக உள்ளது. இதுவரை இப்படத்தின் Glimpse, மூன்று பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

வலிமை படத்தின் மொத்த பட்ஜெட் 100-150 கோடி வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வமான தகவல் கிடைக்கவில்லை. தற்போது இப்படம் வெளியாவதற்கு முன்பே 200 கோடிக்கு விற்பனையாகியுள்ளது என்று தகவல் வெளிவந்துள்ளது.