2021 இல் ஸ்ரீதர் வேம்பு -க்கு நடந்த சோகம் என்ன..?

*ஸ்ரீதர் வேம்பு*

இந்திய ஸ்டார்ட்ப் மார்க்கெட்டில் 2020 முடியும் நேரத்தில் 30 யூனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் சுமார் 43 யூனிகார்ன் நிறுவனங்கள் 2021 ஆம் ஆண்டில் மட்டும் உருவாகியுள்ளது. அதில் 2021ல் ஏப்ரல் மாதத்தில் மட்டும் சுமார் 6 யூனிகார்ன் நிறுவனங்கள் உருவாகியுள்ளது. இதனால் கவலை அடைவதாக தெரிவித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு.

யூனிகார்ன் நிறுவனங்கள் என்றால் என்ன? ஸ்டார்ட்அப் சந்தையில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் முதல் முறையாக 7,500 கோடி அதாவது 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அது தொட்டால் யூனிகார்ன் என்று அர்த்தம். வர்த்தக மற்றும் சேவை விரிவாக்கத்திற்காக முதலீட்டை ஈர்க்கும் போது மதிப்பீடு செய்யப்படும். அப்போது 1 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அது பெரும் பொழுது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

கொரோனா தொற்றுக்காலத்தில் வென்சர் கேப்பிடல் மற்ற முதலீடுகள் மிகவும் மந்தமாக இருந்த நிலையில் ஸ்டார்ட்அப் நிறுவங்களில் புதிய முதலீடுகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. அதிக அளவிலான முதலீடுகள் 2021 ஆம் ஆண்டு ஆரம்பத்திலேயே குவியத் துவங்கியது. இதன் காரணமாக 43 நிறுவனங்கள் 2021இல் அதிகப்படியான முதலீடுகளைப் பெற்று யூனிகார்ன் நிலையை அடைந்துள்ளது. இதற்கு முன் வெறும் 30 யூனிகார்ன் நிறுவனங்கள் மட்டுமே இந்தியாவில் இருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இதை அறிந்த சென்னை ப்ராடெக்ட் நிறுவனமான Zoho நிறுவனத்தின் தலைவரான ஸ்ரீதர் வேம்பு “Investment Bubbles”(முதலீட்டுக் குமிழிகளின்) வரலாற்றைப் படித்த அனைவருக்கும் இது கவலையடையச் செய்ய விஷயமாகவே இருக்கும் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.