இயக்குனருடன் இணையும் சமந்தா உண்மை என்ன..?

*சமந்தா*

தென்னிந்திய சினிமா துறையில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தனக்கான ஏராளமான ரசிகர்களையும் இவர் சம்பாதித்துள்ளார்.

நடிகை சமந்தா தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதை தெரிவித்தனர். இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர் இன்னும் பலர் சமந்தாவை விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் விவாகரத்துக்கு முன் சமந்தா “தி ஃபேமிலிமேன்Season 2 என்ற வெப் சீரிஸ் தொடரில் நடித்திருந்தார். அந்தத் தொடரில் சமந்தா எடுத்து நடித்த கதாபாத்திரத்தை பலரும் விமர்சித்தனர். தற்போது மீண்டும் அந்தத் தொடரின் இயக்குநருடன் இணைந்து நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த தொடரில் நடிகை சமந்தா கவர்ச்சியாக நடித்துள்ளதால் தான் நாக சைதன்யாவுடன் விவாகரத்து செய்து கொண்டார் என்று சர்ச்சைகள் கிளம்பியது. இந்நிலையில் அத் தொடரின் இயக்குனரான ராஜ் மற்றும் டீகே இயக்க இருக்கும் அடுத்த தொடரில் சமந்தா நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

புதிதாக இயக்க உள்ள தொடர் அமேசான் ப்ரைம் OTTக்காக உருவாக்கப்பட உள்ளது. இதில் பாலிவுட் பிரபல நடிகரான வருண் தவான் நடிக்க உள்ளார். இத்தொடர் ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட இருக்கிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.