என்னது யூடியூப் மதன் கௌரிக்கு கல்யாணமா எப்போ?

*மதன் கௌரிக்கு கல்யாணமா*

தமிழ் யூடியூபர்களில் முன்னணி யூடியூபராக இருப்பவர் மதன் கௌரி. ஐந்து வருடங்களாக யூட்யூபில் பயணம் செய்து கொண்டிருக்கிறார். இவரது கடின உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இவ்வளவு உயரத்தை அடைந்துள்ளார்.

உலகில் நடக்கும் விஷயங்களை கண்டெண்டாக எடுத்து அதை மக்களுக்குப் புரியும் படி முழுவிவரத்தையும் தன்னுடைய வீடியோ மூலம் கூறுவார். இவர் விரிவாக கூறும் இந்த செய்திகள் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்தது.

தற்போது இவருடைய யூடியூப் சேனலுக்கு சுமார் 5.78 மில்லியன் Subscribers உள்ளன. தமிழ்நாட்டின் பிரபலமான நபர் என்று இவரைக் கூறலாம். மதன் கௌரிக்கு ரசிகர் பட்டாளம் MGSquad என்ற பெயரில் உள்ளன.

நேற்று மதன் கௌரி தனது யூடியூப் சேனலில் ஒரு வீடியோவை பதிவுசெய்கிறார் அதில் கல்யாணம் ஆகப் போகிறது என்று குறிப்பிட்டார். இதைப்பார்த்த அவரின் ரசிகர்கள் சந்தோஷமடைந்து அந்த வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றனர்.

முதலில் இந்த சேனலை மதன் ஆரம்பித்ததற்கு காரணம் அவர் வாழ்க்கையில் நடந்த காதல் தோல்வியால் தான். சேனலை ஆரம்பித்தப்பிறகு அவர் இதிலேயே முழு கவனத்தையும் செலுத்தி தற்போது இந்த உயரத்தை அடைந்திருக்கிறார்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால் சில வருடங்களுக்கு முன்பு எந்த காதல் தோல்வி அடைந்ததோ தற்போது அதே காதலுடன் இந்த ஆண்டு திருமணம் செய்யப் போவதாக கூறியிருக்கிறார் மதன். அவர் காதலியின் பெயர் நித்யா.