Youtube பிரிமியம்ல அப்படி என்ன இருக்கு?

*Youtube Premium*

இப்போதெல்லாம் நீங்கள் Youtube செயலியை பயன் படுத்திக் கொண்டிருக்கும் போது அடிக்கடி உங்களுக்கு Youtube Premium வாங்குங்கள் என்று Youtube தரப்பிலிருந்து Notifications வரும். அந்த Youtube Premiumல் என்ன கிடைக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

Youtube Premium என்பதுபற்றி பார்த்தால், நீங்கள் மாதம் ரூபாய் 129 செலுத்தினால் நீங்கள் Ad-freeயாக Youtube வீடியோக்களை பார்த்துக் கொள்ளலாம். அதாவது நீங்கள் யூடியூபில் ஏதாவது ஒரு வீடியோவை கிளிக் செய்யும்போது 1 அல்லது 2 Ad(விளம்பரங்கள்)வரும் அந்த Adsகள் வராமல் இருப்பதற்காக நீங்கள் அந்த 129 ரூபாய் செலுத்தலாம்.

அதுமட்டுமில்லாம் நீங்கள் எந்த வீடியோக்களை பார்த்தாலும் Backgroundல் அதை ஒலிக்க விடலாம், அதாவது நீங்கள் ஒரு வீடியோவை பார்த்துக்கொண்டிருக்கும்போது மொபைல் ஸ்க்ரீன் Off செய்தால்கூட இந்த வீடியோவின் ஒலி(Sound) கேட்டுக்கொண்டே இருக்கும் இதற்குப் பெயர் Background Play.

நீங்கள் வீடியோக்களை டவுன்லோட் செய்து Offlineல் பார்க்கிறீர்கள் என்றால் அதை High Qualityல் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ள முடியும், Youtube Music கூட இந்த Premiumஇல் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

வரும் ஜனவரி 31 ஆம் தேதி Picture-in-Picture Optionகூட இந்த Youtube Premium iosல் வரப்போகிறது, இது எல்லாத்துக்கும் வெறும் ரூபாய் 129 மட்டும்தான்.