உலகத்திலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் எது?

*அதிக வசூல்*

உலகத்திலேயே சிறந்த பொழுதுபோக்கு என்றால் அது திரைப்படம் தான். உலகத்தில் பல மொழிகளில் பலகோடி திரைப்படங்கள். திரைப்படங்கள் பொழுதுபோக்கு மட்டும் இல்லாமல் சில பாடங்களையும் கதைகள் மூலம் கற்றுக் கொடுக்கும்.

இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளன. பலவித மக்கள் அனைத்து மொழி படங்களையும் பார்த்து ரசிக்கின்றனர்.

தற்போது நாம் உலகத்திலேயே இதுவரை அதிகமாக வசூலிக்கப்பட்ட மூன்று திரைப்படங்களைப் பற்றி இதில் பார்ப்போம்:

டைட்டானிக்(Titanic)

1997ல் உலகம் முழுவதும் இப்படம் வெளியானது. இந்த திரைப்படம் மொத்தமாக 15,600 கோடி வசூல் செய்துள்ளது. டைட்டானிக் திரைப்படம் பல மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்து உள்ளது என்றே கூறலாம். இந்த பட்டியலில் இப்படம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அவெஞ்சர்ஸ் என்ட் கேம்(Avengers End Game)

மார்வெல் திரைப்படங்கள் பொருத்தவரை கோர்வையாக ஒரு திரைப்படத்தில் இருந்து அடுத்து வரக்குடிய திரைப்படம் Interconnect ஆகியிருக்கும். இந்த அவெஞ்சர்ஸ் என்ட் கேம் மார்வலின் Phase 3 படமாகும். இப்படம் 12 வருடங்களாக தொடரப்பட்ட Infinity Sagaவின் முடிவு என்று கூறலாம். இந்த படத்தை உலக மக்கள் சிறியவர்கள் பெரியவர்கள் அனைவரும் பார்த்து ரசித்தனர். 2019-ல் வெளியாகி சுமார் 20,000 கோடி வசூலித்துள்ளது.

அவதார்(Avatar)

அவதார் திரைப்படம் வித்தியாசமான கதை களத்தில் Fantasy Thriller அடிப்படையில் அமைந்திருக்கும். சிறியவர்களாள் மிகவும் ரசிக்கப்பட்டது இந்த திரைப்படம். 2009இல் இப்படம் வெளியாகி சுமார் 20,800 கோடி வசூலித்துள்ளது.