இரண்டு பேரில் யார் பெருசுன்னு அடிச்சு பார்க்கலாம்

*Valimai vs Beast*

நடிகர் அஜித் குமார் ரசிகர்களின் இரண்டு வருட காத்திருப்பு போராட்டம் வலிமை திரைப்படம் எப்போது வெளியாகும் என்பதுதான்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் கடந்த ஜனவரி 13ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால் கொரோனாவின் பரவல் காரணமாக தமிழக அரசாங்கம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தியதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டது.

இந்நிலையில் நடிகர் தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் கோடை கால விடுமுறையை முன்னிட்டு வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வலிமை திரைப்படத்தை மார்ச் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் அஜித்குமார் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் சந்திப்பிலும் இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

எது எப்படியோ கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் அஜித்குமாரை திரையில் பார்க்காத ரசிகர்கள் வலிமை திரைப்படத்தை திரையில் பார்க்க மிகவும் வெறித்தனமான ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.