விராட் கோலி | குடும்பத்திற்கு மிரட்டல் விட்டது யார்..?

*விராட் கோலி குடும்பத்திற்கு மிரட்டல்*

விராட் கோலிக்கு டுவிட்டரில் மிரட்டல் விட்ட இருபத்தி மூன்று வயது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி இளைஞர் ராம் நாகேஷ் அக்கு பந்தினி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓர் ஆண்டிற்கு 24 லட்சம் சம்பளம் வாங்கியவர் தனது தகாத செயலால் கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது.

2021 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் தோல்வி கண்டது.

இதனையடுத்து இந்திய அணியின் வீரர்களை பலரும் கடுமையாக விமர்சித்தனர். கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவியான அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு டுவிட்டரில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்த மகளிர் கமிஷன் உடனடியாக மிரட்டல் விட்டவரை கண்டுபிடிக்க உத்தரவுவிட்டது.

மும்பை போலீஸ் விராட் கோலி குடும்பத்திற்கு மிரட்டல் விட்டவரை தேடிவந்தது இந்தநிலையில் ஹைதராபாத்தை சேர்ந்த ராம் நாகேஷ் அக்கு பந்தினி என்ற 23 வயது இளைஞர் விராட் கோலி குடும்பத்திற்கு மிரட்டல் விட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஐஐடியில் பிடெக் படித்த ராம்நாகேஷ் ஃபுட் டெலிவரி ஆப் ஒன்றில் ஆண்டிற்கு 24 லட்சம் ரூபாய்க்கு பெங்களூரில் வேலை பார்த்து வந்தவர் அமெரிக்காவில் முதுகலை படிப்பு படிக்க அதற்காக கொரோனா லாக்டோன் காரணமாக ஐதராபாத் திரும்பியுள்ளார்.

பள்ளிப்படிப்பில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்ற ராம் நாகேஷின் மும்பை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் முதுகலைப் படிப்பு படிக்க அதற்காக தன்னை தயார் செய்து வந்துள்ளார் தற்போது இந்த செயலால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டார்.