விஜய் சேதுபதியை | உதைத்த நபர் யார்?

*விஜய் சேதுபதியை உதைத்த நபர் யார்*

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி விமான நிலையத்தில் தாக்கப்பட்டது சேய்தி தற்போது பரபரப்பாகப் பேசி வருகிறது.

பெங்களூர் விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினரோடும் தனது உதவியாளர்களுடன் விஜய் சேதுபதி நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது நல்ல உயரத்துடன் வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்தபடி ஒரு நபர் வேகமாக ஓடிவந்து பாதுகாப்பாளர்களை தள்ளிவிட்டு விஜய் சேதுபதியின் முதுகில் குதித்தபடி மிதித்தார்.

இதனை எதிர்பார்க்காத விஜய் சேதுபதி உடனே நிலைகுலைந்து போகிறார் ஆனால் தனது காவலர்களும் உதவியாளர்களும் அந்த நபரை தடுத்து அங்கிருந்து தூக்கி சென்று விட்டனர்.

ஆனால் தன்னை தாக்கியதை உணர்ந்த விஜய் சேதுபதி கோபத்தில் திரும்பி அந்த நபரை தாக்க செல்கிறார்.

இந்தக் காட்சிகள் மட்டும்தான் வீடியோவில் பதிவாகி உள்ளது இது பெங்களூரில் உள்ள ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம் ஆகும் விஜய் சேதுபதியின் மீது தாக்குதல் நடந்தது உண்மை ஆகியுள்ளது.

இதனையடுத்து இந்த சம்பவத்தை பற்றி சிலர் கூறுவது விஜய்சேதுபதியை தாக்கியது பாஜக ஆதரவாளர் தான் எனவும் மற்றும் சிலர் கர்நாடகாவில் தமிழ் நடிகரை கன்னடர் ஒருவர் தாக்கி விட்டதாக எனவும் வதந்தி பரப்பி வருகின்றனர்.

ஆனால் தற்போது விஜய் சேதுபதியை தாக்கிய நபர் யார் என்று தெரிய வந்துள்ளது இந்த தாக்குதல் திடீரென்று நடந்த தாக்குதல் இல்லை என்று தெரியவந்துள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி சில மாதங்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் மாஸ்டர் செஃப் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் இதற்கான படப்பிடிப்பு பெங்களூருவில் நடந்து வருகின்றது. இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு வரும் போதுதான் விமானநிலையத்தில் விஜய்சேதுபதி தாக்கப்பட்டார்.

அதாவது மாஸ்டர் செஃப்யின் படப்பிடிப்பின் குழுவினரை சேர்ந்த ஒரு நபருக்கும் விஜய் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நபர் விஜய்சேதுபதியை ஒருமையில் பேசியதாகவும் பதிலுக்கு விஜய் சேதுபதி அந்த நபருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதைப்பற்றி விஜய் சேதுபதி புகார் அளித்தார். இதனையடுத்து அந்த நபரை அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் உடனடியாக அந்த இடத்திலிருந்து வெளியேற்றினர்.

இதனையடுத்து அந்த நபர் அப்போதே விஜய் சேதுபதியை எச்சரித்து விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துவிட்ட விஜய் சேதுபதி பெங்களூருவில் இருந்து சென்னை செல்வதற்கு விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது அவரிடம் பிரச்சினை செய்த நம்பரும் அங்கு இருந்துள்ளார் விஜய்சேதுபதியை பார்த்ததும் மறுபடியும் அவருடன் வாக்கு வாதத்திற்கு சென்றுள்ளார் அதற்கு தக்க பதிலடி விஜய்சேதுபதியும் கொடுத்துள்ளார் இதனையடுத்து வாக்குவாதம் சூடுபிடித்து கைகலப்பு வரை சென்று விட்டது. அங்கிருந்த பாதுகாவலர்கள் விஜய் சேதுபதியை பாதுகாப்பாக அங்கிருந்து அலைத்து சென்றுவிட்டனர்.

அப்போது ஆத்திரமான அந்த நபர் கோபத்தில் வேகமாக ஓடிவந்து விஜய்சேதுபதி முதுகில் மிதித்து ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டார். முதலில் பதறிய விஜய் சேதுபதி பின்னர் அந்த நபரை தாக்க சென்றார் ஆனால் அதிகாரிகள் தடுத்துவிட்டனர். அதிகாரிகள் அந்த நபரின் மீது புகார் அளிக்க வலியுறுத்தினர். இதனையடுத்து அந்த நபரின் மீது விஜய்சேதுபதி சார்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் விஜய்சேதுபதியின் ரசிகர்கள் மிகவும் கோபத்தில் உள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் விஜய்சேதுபதியின் மீது பால விமர்சனங்களை செய்து வருகின்றனர்.