KGF 3 வில்லனாக நடிக்க போகும் தமிழ் நடிகர் யார்?

*KGF 3*

இந்தியாவில் பாகுபலி இரண்டாம் பாகத்திற்கு பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்டு உள்ள திரைப்படம் கே.ஜி.எஃப் பாகம் 2, கன்னட முன்னணி நடிகரான யாஷ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது, ஹோம்பலே ஃபிலிம்ஸ் இப்படத்தினை தயாரித்துள்ளது. படத்தின் இசையை இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் அமைத்துள்ளார், இசை உரிமைகள் லஹரி மியூசிக் மற்றும் டி-சீரிஸுக்குச் சொந்தமாகியுள்ளது.

தற்போது இன்று கே.ஜி.எஃப் 2 திரையரங்குகளில் வெளியாகி உள்ளது, திரைப்படம் அனைத்து பக்கமும் பிரமாதமான வரவேற்பு பெற்று வருகிறது. கே.ஜி.எஃப் பாகம் 3 உருவாக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது அதில் வில்லனாக தமிழ் நடிகர் ஒருவர் நடிக்கப் போவதாக கூறி வருகின்றனர்.

அவர் யார் என்று பார்த்தால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான எஸ்.ஜே சூர்யா அவர்கள், பல படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர். தற்போது இவர் கே.ஜி.எஃப் 3இல் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

கே.ஜி.எஃப் 3இல் வில்லனாக இருந்து எஸ்.ஜே சூர்யா நடிக்கப் போகிறார் என்ற செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment