Beast திரைப்படத்தில் வரும் இந்த மொட்டை வில்லன் யார்?

*Beast மொட்டை வில்லன்*

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட், இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை 6 மணி அளவில் வெளியாகியது.

டிரெய்லரை பார்த்த அனைவரும் பிரமாதமாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர், இந்த டிரெய்லரை பார்த்த பிறகு இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் பெருகியுள்ளது.

பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லரில் ஷாப்பிங் மால் ஐ கடத்தி வைத்திருக்கும் கும்பலில் தலைமை தாங்கிய ஒருவர் முகமூடி அணிந்து மொட்டை போல் காட்சி அளிக்கிறார், இவர் யார்? யாராக இருப்பார் என்று சமூக வலைதளங்களில் பல கேள்விகள் எழும்பின.

இவர் யார் என்று பார்த்தால், மலையாள சினிமாவின் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, இவர் தான் பீஸ்ட் திரைப்படத்தின் மெயின் வில்லன் என்று கூறப்படுகிறது, ஷைன் டாம் சாக்கோ நிறைய மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment