யாரு இந்த கோவிந்த் தாட்ஸ்..?

*கோவிந்த்*

இவர் தமிழ்நாட்டை சேர்ந்த நாமக்கலில் பிறந்துள்ளார். கோவிந்த் ஒரு ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார். நாமக்கல் பொறியியல் கல்லூரியில் தன் படிப்பை முடித்துவிட்டு. இவரது சம்பாத்தியத்தில் இவரது குடும்பம் இயங்குகிறது இவரால் முடிந்த அளவிற்கு இவர் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே உழைத்து வருகின்றார்.

இவர் இவரது குடும்பம் ஒரு குடிசை வீட்டில் வசித்து வருகின்றது.அந்த வீட்டினை அவரை அவரது யூடியூப் சேனலில் வீடியோவாக பதி விட்டுள்ளார். சென்னையில் ஒரு நெட்வொர்க் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார் பின்பு அந்த வேலை பிடிக்காமல் ஒரு யூடியூப் சேனலில் பணிபுரிந்து வந்துள்ளார்.

அங்கு ஒரு மூன்று மாத காலம் சம்பள பாக்கி இவருக்கு இருந்துள்ளது. இவர் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அயராது உழைத்து பல வீடியோக்களை பதிவிட்டுள்ளார் ஆனால் அந்த யூடியூப் சேனல் இவருக்கு சம்பளம் அளிக்காமல் ஏமாற்றி விடலாம் என்று எண்ணி உள்ளனர்.

இவர் தொடர்ச்சியாக பல வீடியோக்களை யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார் ஆனால் இவரது வீடியோக்களை பிடிக்காமல் அந்த யூடியூப் சேனல் இவருக்கு மூன்று மாத காலமாக சம்பளம் தராமல் ஏமாற்றியுள்ளனர்.

சம்பள பாக்கியை கேட்ட கோவிந்தை உனக்கு சம்பளம் கொடுக்க முடியாது உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்று கூறியுள்ளனர். மிகவும் வேதனையடைந்த கோவிந்த் அந்த வேலையை விட்டு விட்டு. எனது மூன்று மாத சம்பளத்தை வைத்துக் கொண்டு உங்கள் யூடியூப் சேனலை பெரிதாக்கி கொள்ளுங்கள் என்ன அசிங்க படுத்தி விட்டு வந்துள்ளார்.

பின்பு இவர் தொடர்ச்சியாக வீடியோக்களை செய்து அவரது பழைய சேனலில் பதிவிட்டு வந்துள்ளார் அந்த சேனலின் பெயர் அங்கதான் டிவிஸ்ட். ஆனால் அந்த சேனலும் காப்பிரைட் பிரச்சனையினால் மூடப்பட்டது. அந்த சேனலில் மொத்த பார்வையாளர் எண்ணிக்கை 900 ஆவர். பின்பு கிடைத்த வேலையை செய்து சிறிது காலங்கள் ஓட்டியுள்ளார்.

ஆனால் கொரோனாவினால் அரசு அறிவித்த ஊரடங்கின் காலத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் இவர் தொடங்கிய யூடியூப் சேனலிலன் பெயர்தான் கோவிந்த் தாட்ஸ். இவர் அந்த சேனலில் பதிவிட்ட அனைத்து வீடியோக்களும் நிறைய பார்வையாளர்களை ஈர்த்தன. இவரது காமெடி வீடியோ களுக்கும் இவரது கலாய் வீடியோகளுக்கும் பார்வையாளர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.

இவரது முதல் மாத வருமானம் 40 ஆயிரத்திற்கும் மேல் என்பதை இவரே இவரது யூடியூப் சேனலில் பதிவிட்டார். இவ்வாறு முதல்முதலாக யூடியூபில் தனது சம்பாத்தியத்தை மக்களிடையே வெளிப்படையாக பதிவிட்டவர் இவராவார். முதல் மாதத்திலேயே நல்ல வரவேற்ப்பை பெற்ற கோவிந்துடைய சேனல் போகப்போக அதிக பார்வையாளர்களை ஈர்த்தன. இப்பொழுது அவருக்கு சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேல் பார்வையாளர்கள் உள்ளன.

அவரிடம் நீங்கள் உங்கள் பழைய வேலையை பற்றி கூறுங்கள் என்று கேட்டபொழுது நான் பலைய யூடியூப் சேனலில் இருந்து வெளிவந்த காரணத்தினாலேயே என்னால் வெற்றிபெற முடிந்தது மற்றும் நமக்கு பிடித்ததை விடாமல் முயற்சி செய்து கொண்டே இருந்தாள் யார் வேணாலும் வெற்றி பெறலாம் என்று கூறியுள்ளார்.