யார் இந்த லதா மங்கேஷ்கர் | Cars | Net Worth | Family

*லதா மங்கேஷ்கர்*

இந்தியாவின் Nightingale என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

1929ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் தேதி இந்தோரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். மராத்தி, கோங்கனி இசை கலைஞர் தீனாநாதின் மகள் லதா மங்கேஷ்கர். பிறந்த போது இவருக்கு ஹேமா என்று தான் பெயரிட்டனர் ஆனால் பிறகு இவர் தந்தை நடித்த நாடகத்தில் ஒன்றான பாவ் பந்தநில் வரும் லதிகா என்ற கதாபாத்திரத்தின் நினைவாக மகளின் பெயரை லதா என்று மாற்றினார்.

மூன்று சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுடன் பிறந்தவர் லதா, இவருடன் பிறந்தவர்கள் பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் தான். லதா மங்கேஷ்கருக்கு முதல் முதலில் இசைப்பாடம் கற்றுக்கொடுத்தது அவருடைய தந்தை தான். இந்தியாவின் மற்றொரு இனிய பாடகி ஆஷா போஸ்லே இவருடைய சகோதரி என்பது குறிப்பிடதக்கது. ஐந்து வயதாக இருக்கும் போது தனது தந்தையின் இசைக்குழுவில் இணைந்து நடிக்கத்தோடங்கினார் லதா.

1943ஆம் ஆண்டு லதாவிற்க்கு 13 வயது ஆன நிலையில் அவருடைய தந்தை இதைய நோயால் உயிரிழந்தார். அப்போது அவருடைய குடும்பத்திற்க்கு உதவுவதற்காக மாஸ்டர் நாயக் என்பவர் சினிமாவில் பாடுவதற்கு வாய்ப்பு பெற்றுக்கோடுத்தார், அப்போதிலிருந்து பாடகியாகவும், நடிகையாகவும் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார் லதா.

மஜ்பூத் என்ற திரைப்படத்தில் இவர் பாடிய பாடல் இவருடைய திரை வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. பின்னனி பாடகர், தயாரிப்பாளர் என்ற பல முகங்களை கோண்ட லதா சில படங்களுக்கு இசை அமைத்தும் இருக்கிறார். இந்தியாவில் அனைத்து பேரும் இசைக்கலைஞர்களுடனும் பணியாற்றியுள்ளார் லதா, நான்கு தலை முறைகளை கடந்த பாடகி என்ற பேருமை லதாவிற்க்கு உண்டு.

கலையுலக வாழ்க்கை 60ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து 30ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர். அதிகமான மொழிகளில் அதிகமான பாடல்களை பாடிய பேருமை லதாவிற்க்கு உண்டு. மகாராஷ்டிரா அரசின் சிறந்த இசை அமைப்பாளர் விருந்தினை 1965ஆண்டு வென்றவர்.

சுமார் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடிய லதா மங்கேஷ்கரை இசைக் குயில் என்று அன்போடு அழைக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். இந்தியாவின் மிகப்பெரிய விருதான பாரத ரத்னா, பத்ம பூசன், பத்ம விபூசன் விருதுகளை பெற்றது மட்டுமல்லாமல் தேசிய விருது, தாதாசாகெப் பால்கே விருது, நான்கு முறை Filmfare விருது மற்றும் பல விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளார் லதா மங்கேஷ்கர்.

நான்கு வயதில் பாடத்துடங்கி 65ஆண்டுகள் கடந்து சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இந்தியாவின் சிறந்த பின்னனி பாடகியாக இருக்கிறார். மேலும் லதா திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடதக்கது. லதா மங்கேஷ்கருக்கு கொரோனா உருதி செய்யப்பட்டது இதனால் ஜனவரி 11ஆம் தேதி மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் கூறினர். லதா மங்கேஷ்கர் மறைவுக்கு திரை துறையினர், ரசிகர்கள், தலைவர்கள் இறங்கள் தெரிவித்து வருகின்றனர்.

லதா மங்கேஷ்கர் மொத்த சோத்து மதிப்பு சுமார் 105 கோடி என கூறப்படுகிறது. மாதம் ரூபாய் 40 லட்சம் மற்றும் வருடம் தோராயமாக ரூபாய் 6 கோடி என்று குறிப்பிட்டுள்ளன.

லதா மங்கேஷ்கர் வைத்திருக்கும் கார்கள் வகைகள்:

  • Bentley Flying Spur – ரூபாய் 3.21 கோடி.
  • BMW 530i – 55.4 லட்சம்.
  • Audi A4 – 41.49 லட்சம்.