யார் இந்த தமிழ் கேமிங் சேனல்.

*யார் இந்த தமிழ் கேமிங் சேனல்*

தமிழ் கேமிங் சேனல் யார் என்று தெரியுமா?

விவேக் பிரேம் என்னும் இரு நபர்கள் தான் தமிழ் கேமிங் யூடியூப் சேனலை ஆரம்பித்தவர்கள். விவேக் பிரேம் இருவரும் அண்ணன் தம்பி. தமிழ்நாட்டில் முதல் தமிழ் கேம் சேனல் எது என்று கேட்டாள் அது இந்த சேனல் ஆகத்தான் இருக்க முடியும்.

ஆரம்பத்தில் விவேக் பிரேம் கேமர்ஸ் என்னும் ஒரு யூடியூப் சேனலை ஆரம்பித்துள்ளனர். இன்டர்நெட் வை-பை எல்லாம் அறிமுகமான காலத்தில் இவர்கள் இந்த சேனலை ஆரம்பித்துள்ளனர். அப்போது டபிள்யூ டபிள்யூ ஈ போன்ற கேம்களை ரெக்கார்டு செய்து வீடியோக்களாக அவங்களுடைய சேனல்களில் அப்போது செய்துள்ளனர்.

ஆனால் அவர்கள் நினைத்தால் அவருக்கு அந்த சேனல் ரன் ஆகவில்லை. சேனல் ஆரம்பித்து ஆறு மாதங்களில் காப்பிரைட் ஸ்ட்ரைக் போன்ற பிரச்சனைகள் வந்து சேனை சஸ்பெண்ட் செய்யப்பட்டது ஆதலால் அந்த சேனலில் திரும்ப வீடியோக்கள் போடுவதை நிறுத்தி விட்டார்கள்.

அதற்குப்பிறகுதான் தமிழ் கேமிங் சேனல் ஸ்டார்ட் பண்ணி விடுகிறார்கள். அதிலும் கேமிங் வீடியோக்களை அப்லோட் செய்து வருகின்றனர். அப்போதுதான் ஒரு எதிர்பாராத விஷயம் நடக்கிறது அதாவது அவங்களுடைய சேனல் யாரோ ஒருவரால் ஹேக் செய்யப்பட்டு விட்டது. ஆனால் அதை அவர்கள் விடாமல் யூட்யூபில் ரிப்போர்ட் செய்து எப்படியோ சேனலை மீட்டெடுத்தனர்.

ஒரு நாளைக்கு சுமார் 3 மணி நேரம் லைவ் வீடியோ போடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

தமிழ் கேமிங் சேனல் தொடங்கிய நாள் ஜூலை 8, 2011. தற்போது இந்த சேனலை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்து வருகின்றனர்.

இதைப்பற்றி மற்ற கேமிங் யூட்யூப்பரான பப்ஜி மதன், கேமிங் தமிழனிடம் கேட்டப்போது அவர்கள் ஃப்ரீ பையர் மற்றும் பப்ஜி கேமை விளையாடி இருந்தாள் இந்நேரம் தமிழ்நாட்டில் அவர்களுக்கு தான் அதிக சப்ஸ்கிரைபர் உடைய கேமிங் சேனலாக இருந்திருப்பார்கள் எனக்கூறினார்கள்.