யார் இந்த Tamil Tech தமிழ்செல்வன்

*Tamil Tech தமிழ்செல்வன்*

தமிழில் Tech சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களில் பிரபலமாக இருப்பது Tamil Tech யூடியூப் சேனலாகும். Tamil Tech யூடியூப் சேனலை உருவாக்கியவர் தமிழ்ச்செல்வன். பல வருடங்களாக இந்த யூடியூப் சேனலை உபயோகித்து வருகிறார். இந்த சேனலுக்கு பல மில்லியன் Subscribers உள்ளன.

நம்மில் பல பேருக்கு இந்த Tamil Tech சேனலை பற்றி தெரிந்திருக்கும். இந்த சேனல் உடைய அட்மின் தமிழ்ச்செல்வன். யார் இந்த தமிழ்ச்செல்வன் இவரைப் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்ச்செல்வன் பிறந்து வந்தது எல்லாம் கிருஷ்ணகிரியில் தான். இவருடைய அப்பாவைப் பற்றி பார்த்தோமென்றால் அவர் தன்னுடைய Business ஐ பார்த்துக்கொண்டும் நடிகர் கமல்ஹாசன் மாவட்ட ரசிகர் மன்ற தலைவராகவும் இருந்திருக்கிறார்.

தமிழ்ச்செல்வனுக்கு சிறிய வயதிலிருந்தே கம்ப்யூட்டர் மேல் பெரிய ஆர்வம் இருந்தது. இதனால் தமிழ் செல்வனுடைய அப்பா இவரை ஒரு கம்ப்யூட்டர் வகுப்புக்கு அனுப்பியுள்ளார்.

தமிழ்ச்செல்வன் பத்தாம் வகுப்பு படிக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக இவருடைய அப்பா இறந்துவிடுகிறார். அதற்குப் பிறகு வீட்டில் பெரும் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தை எப்படி பார்த்துக் கொள்ள போகிறோம் என்று நினைத்து பலதடவை கவலைப்பட்டு அழுதுள்ளார்.

இவருடைய பள்ளி வகுப்பு முடிந்த பிறகு பெங்களூருவுக்கு சென்று கல்லூரியில் B.E படித்து முடித்துள்ளார். கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு வீட்டைச் சுற்றி இருந்தவர்கள் வேலைக்கு போகவில்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

ஆனால் இதையெல்லாம் அவர் கண்டுக்காமல் வீட்டில் அனுமதி கேட்டுக் கொண்டு சில Courses படித்துக்கொண்டே Freelance செய்து கொண்டிருந்தார். அதன் பிறகு அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு வந்துள்ளது ஆனால் அது வேண்டாம் என்று சொல்லிவிட்டு TNPSC பரீட்சைகளை எழுதியுள்ளார்.

அதுவும் அவர் நினைத்த மாதிரி அமையவில்லை. தேவையாக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிப்போம் என்று ஆரம்பித்தார். அதில் முதல் முதலில் ஒரு Unboxing வீடியோவை அப்லோட் செய்தார் அதைப் பார்த்து பல negative comments வந்துள்ளது.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார். தற்போது Tech யூட்யூபர்களின் முன்னணி யூடியூபராக திகழ்ந்து வருகிறார்.