யார் இந்த Tesla தமிழன்..?

*Tesla தமிழன்*

உலகின் நம்பர் 1 பணக்காரர் ஆக இருப்பவர் எலான் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற பெரும் நிறுவனத்தின் தலைவரும் ஆவார். அதுமட்டுமில்லாமல் பலப்பல புதிய விஷயங்களையும் செய்து கொண்டு இருக்கிறார் எலான் மஸ்க்.

தற்போது ஒரு மூன்று நாட்களாக ஒரு தமிழ் நபரைப் பற்றி அனைத்து உலக ஊடகங்களும் பேசி ரிடேண்ட் செய்து வருகின்றனர். அவர் யார் என்று பார்த்தால் அசோக் எல்லுச்சாமி.

ஏன் இவரைப் பற்றி பேசுகிறார்கள் என்று பார்த்தால் இவருக்கு ஒரு மிகப்பெரிய வேலை கிடைத்துள்ளது. அது என்னவென்று பார்த்தால் எலோன் மஸ்க் உடைய Tesla Autopilot நிறுவனத்தில் Directorஆக இவருக்கு வேலை கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் ஒரு சுவாரசியமான விஷயம் என்னவென்று பார்த்தால் இந்தியாவின் 138 கோடி நபர்களில் முதல்நபராக அசோக் எல்லுச்சாமி டெஸ்லா நிறுவனத்தில் வேலை செய்ய தகுதி பெற்றுள்ளார்.

அங்குள்ள எலான் மஸ்க் தமிழ்நாட்டிலுள்ள இவரை எப்படி வேலைக்கு எடுத்தார் என்று பார்த்தால், ட்விட்டரில் 2015 அன்று ஒரு Linkஐ பதிவு செய்கிறார் அதாவது யாராவது Teslaவில் வேலை செய்ய விரும்பினால் இந்த Linkல் Register செய்துகொள்ளவும் என்று கூறிப்பிட்டார்.

அதில் Register செய்த நபர் தான் அசோக் எல்லுச்சாமி. இவர் கிண்டியில் உள்ள அண்ணா யுனிவர்சிட்டியில் ECE முடித்துள்ளார் மற்றும் மேற்படிப்பை அமெரிக்காவிலுள்ள மேலான் யுனிவர்சிட்டியில் முடித்துள்ளார்.

தனது படிப்பை முடித்தவுடன் இவர் வெப்கோ மற்றும் Volkswagen நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். அதன்பிறகு தற்போது எலோன் மஸ்க் தனது ட்விட்டரில் பக்கத்தில் நாங்கள் இவரை தான் வேலைக்கு எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டார். இவருடைய சம்பளம் பற்றி எதுவும் கூறவில்லை ஆனால் டெஸ்லாவில் வேலை செய்யும் பொறியாளர்களுக்கு ரூபாய் 7 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது.