YouTube இல் 1வது இடம் யாருக்கு தெரியுமா..?

*YouTube இல் 1வது இடம்*

தமிழ் சினிமா துறையில் முன்னணி பெரும் நடிகர்களுக்கு படம் மூலம் போட்டிகள் இருக்கும். இது காலம் காலமாக தமிழ் சினிமாவில் நடந்த வருவதாகும்.

திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அந்தப்படத்தின் முன்னோட்டத்தை Youtube வெளியிடுவார்கள். அதைப்பார்த்து ரசிகர்கள் படம் இப்படி இருக்குமோ அப்படி இருக்குமோ என்று எதிர்பார்ப்போடு காத்திருப்பார்கள். இது படத்தின் எதிர்பார்ப்பை தூண்டுவதற்கான ஒரு யுக்தி ஆகும். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்பு இந்த ட்ரெய்லர் டீஸர் என்று எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஐந்து வருடங்களாக முன்னணி நடிகர்களின் படத்தின் முன்னோட்டத்தை போட்டிகளாக கருதி வருகிறார்கள். குறிப்பாக விஜய் மற்றும் அஜீத் இவர்களின் படங்களுக்கும் இந்த போட்டி எப்போதும் இருக்கும்.

இந்நிலையில் அஜித்தின் வலிமை திரைப்படத்தின் முன்னோட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த முன்னோட்டம் தற்போது டிரெண்டிங்கில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

வலிமை திரைப்படத்தின் முன்னோட்டம் 24 மணி நேரத்தில் சுமார் 17 மில்லியன் Views மற்றும் அதிக Likes பட்டியலில் 1.32Million Likes பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் 2019ல் வெளியான தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தின் முன்னோட்டம் 24 மணி நேரத்தில் 1.66Million Likesகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இதைப் பற்றி அஜித் ரசிகர்களிடம் கேட்டப்போது இது எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் உடனே வெளியிடப்பட்டது அதனால் எங்களால் முடியவில்லை அடுத்ததில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட்டனர்.