தெலுங்கு பிக் பாஸ் சீசன் 5 வின்னர் யார் தெரியுமா..?

*பிக் பாஸ் சீசன் 5 வின்னர்*

நாகார்ஜுனா அக்கினேனி தொகுத்து வழங்கிய பிக் பாஸ் தெலுங்கு சீசன் 5 நிகழ்ச்சியின் வெற்றியாளராக VJ சன்னி வெளிவந்துள்ளார். தனது மகிழ்ச்சியான தருணத்தை வாழ்ந்து காட்டிய சன்னி “என்னை வெற்றி பெற வைத்த என்னுடைய 19 போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு நன்றி” என்று கூறினார். அதேநேரத்தில் முதல் ரன்னர் அப் சண்முக் எப்படி வெற்றி பெறவில்லை ஆனால் இந்த பயணம் அவருக்கு முக்கியமானது என்று கூறினார்.

சன்னிக்கு சமூகவலைதளங்களில் அபரிமிதமான அன்பும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. அவரது ரசிகர்களும் நெருங்கிய நண்பர்களும் ட்விட்டரில் வாழ்த்து செய்திகளை அனுப்பி வருகின்றனர்.

VJ சனி 18 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டிற்குள் அவரது பயணம் உண்மையிலேயே ஒரு ரோலர்-கோஸ்டர் சவாரியாகவே இருந்தது.

சன்னி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் ஒரு செய்தி சேனலில் வாழ்க்கை முறை நிருபராக மாறினார். அருண் ரெட்டி என்ற பெயரை பின்பு VJ சன்னி என்று மாற்றினார். மெதுவாக கல்யாண வைபோகம் படத்தில் நடிக்க ஆரம்பித்தார் அதன் பிறகு திரும்பிப் பார்க்கவே இல்லை