யார் இந்த Rishab தெரியுமா

*Rishab*

பல நபர்களுக்கு vlog of Rishab என்ற யூடியூப் சேனலை பற்றி தெரிந்திருக்கும். அப்படிப்பட்ட யூடியூப் சேனல் எப்படி உருவாகியது என்பது பற்றி பார்ப்போம்.

இவர் பெயர் ரிஷப் இவர் எங்கு பிறந்தார் என்று பார்த்தால் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணாகர் என்ற இடத்தில்தான் பிறந்துள்ளார். இவருடைய அப்பா Building Contract எடுத்து வேலை செய்யும் தொழிலை செய்து வருகிறவர்.

ரிஷப்பிற்க்கு சின்ன வயதிலிருந்தே படிப்பு அவ்வளோவாக வராது. அதுமட்டுமில்லாமல் ஒரு தாழ்வு மனப்பான்மை எப்போதும் இவருக்கு இருக்கும். அதனாலேயே இவர் யார்கிட்டயும் பேச மாட்டார் அமைதியாகவே இருப்பார்.

தன்னுடைய அப்பா Building Contractor Business பார்க்கிறார் சரி நம்மளும் அதே தொழிலை பற்றி படிப்போம் என்று முடிவெடுத்து கோயம்புத்தூரில் Civil Engineering படிக்க ஆரம்பிக்கிறார்.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ஊரடங்கு அமர்த்தப்பட்டது. இந்நிலையில் இவருக்கு ஒரு யோசனை கிடைக்கிறது அதாவது நாம் ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிப்போம் என்று.

Vlog of Rishab என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்து அதில் வீடியோக்களை அப்லோட் செய்துவந்தார். ஆரம்பத்தில் இவருடைய வீடியோ சரியாக யாரும் பார்க்கவில்லை. இவருக்கு தெரிந்தவர்களே இவருடைய வீடியோவை பார்த்து இவருடைய அப்பாவிடம் உங்கள் பையன் கிறுக்குத்தனமாக வீடியோக்கள் அப்லோட் செய்து வருகிறான் அது நல்லாவே இல்லை என்று கூறி விடுகிறார்கள்.

இதனால் வீட்டில் உள்ளவர்களும் ரிஷப்பை ஏன் இப்படி செய்ற என்று கேட்டுள்ளனர். ஆனால் அது எல்லாம் ரிஷாப் கண்டுகொள்ளாமல் ரிஷாப் வீட்டில் உள்ளவர்கள் போல் ஒவ்வொரு வேடத்தில் நடித்து வீடியோக்களை அப்லோடு செய்கிறார்.

சில நாட்கள் கழித்து இவருடைய வீடியோக்களை பலர் தொடர்ச்சியாக பார்த்து வந்தனர். யாரெல்லாம் உன்னுடைய வீடியோ லூசுத்தனமாக இருக்கிறது என்று சொன்னார்களோ அவர்கள் எல்லாம் ரிஷப் என்னுடைய நண்பர், சொந்தக்காரர் என்று சொல்ல ஆரம்பித்தனர்.

இப்படிப்பட்ட அவமானங்கள் அசிங்கத்தையும் கடந்து உருவானதுதான் Vlogs of Rishab யூடியூப் சேனல். தற்போது Vlogs of Rishab யூடியூப் சேனலுக்கு சுமார் 1 மில்லியனுக்கு மேல் Subscribers உள்ளன.