BB 5 அமிர்-க்கு எச்சரிக்கை குடுத்தது யார்…?

*அமிர்*

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் Wild Card மூலமாக வீட்டிற்குள் நுழைந்த அவர் தான் நடன இயக்குனர் அமிர். இவர் மக்கள் மத்தியில் பெரும் அளவு பிரபலமடைந்தது இல்லை ஆனால் தற்போது பிக்பாஸ் மூலம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறார்.

இவர் தற்போது பிரபலமடைந்தற்க்கு காரணம் என்னவென்றால் பிக்பாஸ் சக போட்டியாளரும் மற்றும் சின்னத்திரை நடிகையுமான பவானி ரெட்டி இருவரும் இணைந்து வீட்டிற்குள் ரோமான்ஸ் செய்து வருவதை பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தும் திட்டியும் அடிக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் ஆரம்பத்தில் போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை பயணத்தை பற்றி பேச வேண்டும் என்ற டாஸ்க் இருந்தது. தற்போது Wild Card மூலமாக வீட்டிற்கு வந்த அமிர் மற்றும் சஞ்சீவிற்க்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அமிர் தனது சோகமான வாழ்க்கை பயணத்தை கண்ணீருடன் கூறி சக போட்டியாளர்களையும் கண்ணீர் சிந்த வைத்தார்.

அமிர் வாழ்க்கை பயணத்தை கூறுகையில் சக போட்டியாளர்கள் மட்டுமில்லாது பார்வையாளர்களையும் கண்ணீர் கலங்கச் செய்து விட்டது.

பவானி ரேட்டியின் ரசிகர்கள் அமிரின் காதல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்த வாழ்க்கையாவது பவானிக்கு சிறப்பாக அமைய வேண்டும் என்று அமிரின் காதலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment