ஏன் நடிகர் அஜித்துக்கு பணத்து மேல ஆசை இல்லை

*நடிகர் அஜித்*

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி போன்றவர்கள் ஒவ்வொரு படத்திற்கும் தங்களது சம்பளத்தை அதிகரித்துக்கொண்டே வருகின்றன. ஆனால் இவர்களைப் போல் முன்னணியில் உள்ள நடிகர் அஜித் குமார் ஏன் இவர்களை விட கம்மியாக சம்பளம் வாங்குகிறார் என்று தயாரிப்பாளர் ராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது.

ஒரு நேர்காணலில் தயாரிப்பாளர் ராஜனிடம் விஜய், ரஜினி தங்களது சம்பளத்தை உயர்த்தும்போது ஏன் நடிகர் அஜித்குமார் தனது சம்பளத்தை உயர்த்தவில்லை என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு ராஜன் “பெருந்தன்மை, போதுமென்ற மனம் என்பது அஜித்குமாருக்கு இருக்கிறது. அஜித்குமார் எந்தவித ஆடம்பர செலவும் செய்யமாட்டார். அடக்கமாக வீட்டிலிருந்து கிளம்பினால் ஸ்டூடியோ அல்லது சூட்டிங் ஸ்பாட் அதை முடித்த பிறகு நேராக வீட்டிற்கு சென்று விடுவார். எந்தவித ஆடம்பர விழாக்களும் கிடையாது. தற்போது இருக்கிற புகழ் போதும் என்று நினைக்கின்ற நடிகர்” என்று கூறியுள்ளார்.

தற்போது இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அஜித் குமாரின் ரசிகர்கள் வலிமை திரைப்படத்திற்காக இரண்டு வருடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.