மிண்டும் Trending ஆனாது #ஜோசப்விஜய் ஏன்..!

*ஜோசப்விஜய்*

தென்னிந்திய நடிகரான தளபதி விஜய் பல கோடி ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ளார். சுமார் 28 வருடங்களாக சினிமா துறையில் பயணம் செய்து வருகிறார். பல துயரங்கள் கஷ்டங்கள் சாதனைகள் அனைத்தையும் பார்த்தவர் தளபதி விஜய்.

சில வருடங்களுக்கு முன்பு #ஜோசப்விஜய் என்ற இதே Hashtag வைரலாக பரவியது. அது ஏன் என்றால் தளபதி விஜய் ஒரு கிருத்துவ மதத்தை சேர்ந்தவர் அதனால் அவர் கிறிஸ்தவர் இதற்கு இதுவே ஆதாரம் என்று பலரும் அதை விமர்சித்து வந்தனர்.

தற்போது மீண்டும் இந்த Hashtag ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் நேற்று கிறிஸ்துமஸ் தினம். கிறிஸ்துமஸ் தினத்தை அனைத்து கிறிஸ்தவர்களும் கொண்டாடுவது வழக்கம்.

தளபதி விஜய் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் இதனால் இன்றைக்கு தளபதி விஜயை பிடிக்காதவர்கள் அவர்மீது மதச்சாயம் பூசி வருகின்றனர்.

சிலர் இப்படி விமர்சித்து வருகிறார்கள் ஆனால் தளபதி விஜயின் ரசிகர்கள் ஆம் அவர் கிறிஸ்தவர் தான் அதற்கு என்ன இப்போ என்று அதே Hashtag மூலம் தளபதி விஜய்க்கு ஆதரவாக ட்விட் செய்துவருகின்றனர்.

மதம் சார்ந்து இருப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை வைத்து ஒரு தனி நபரை விமர்சனம் செய்வது ஒழுக்கமில்லாத காரியமாகும். எந்த விமர்சனம் வந்தாலும் தளபதி விஜய்க்கு ஆதரவாக நாங்கள் துணை இருப்போம் என்று தளபதி விஜய் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.